‘பிகில்’ கதை திருட்டு வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

  26
  'பிகில்'

  256 பக்கங்கள் கொண்ட கதையை  எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன்.

  பிகில் படத்துக்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  BIGIL

  இதனிடையே   ‘பிகில்’  திரைப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர்  கே.பி. செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது அதனால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு வலியுறுத்த கே.பி.செல்வா தற்போது  சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

  இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், 256 பக்கங்கள் கொண்ட கதையை  எழுதி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்தேன். இதுகுறித்து பலரிடமும் கதை சொல்லியிருக்கிறேன். என் கதையை திருடி பிகில்  திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  HC

  இந்நிலையில் இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர்  அட்லீ மற்றும் ஏஜிஎஸ்  நிறுவனம் உரிமையியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்க கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.