பிகில்… இத்தனை கோடி நஷ்டமா? விநியோகிஸ்தர்களை வெச்சு செஞ்ச அட்லி!

  0
  6
  பிகில்

  ரூ.200 கோடியை பிகில் தியேட்டரில் ஓடி வசூல் செய்வதெல்லாம் நடக்காத காரியம்.

  தீபாவளிக்கு பெரிய ஆர்பாட்டத்துடன் ரிலீஸான பிகில் திரைப்படம் ரிலீஸான முதல் ஐந்து நாட்களில் 200 கோடியை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரையில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக வாய் திறக்கவில்லை. முதல் நாள், படம் சூப்பர் என்று சொல்லி ட்விட்டரில் பெரிய ஹைப் கொடுத்த ரசிகர்கள் அடுத்த நாள், விஜய்க்காக படம் பார்த்ததாகவும், கதையில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை என்றும் விமர்சனங்களை முன் வைத்தனர். அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று கண்டிஷன் போட்டு ரிலீஸ் செய்த போதிலும், ரூ.800, ரூ1000 என அதிக பணம் கொடுத்தே ரசிகர்கள் பிகில் படத்தைப் பார்த்தனர். 

  bigil

  படம் ரூ.200 கோடிகளை வசூல் செய்துள்ளது என்று பரபரப்பாக நியூஸ் கிளம்பினாலும், வேறு எந்த படங்களும் பெரிதாக போட்டியாக இல்லாத நிலையிலும் நேற்று பிகில் படம் பார்க்க 10 பேர் கூட வராததால் காட்சிகளை ரத்து செய்தது தேவி பாரடைஸ் தியேட்டர். இத்தகைய சூழலில் உண்மையில் பிகில் படம் லாபமா? நஷ்டமா? என்று ஆராய்ந்தால் பகீர் ரக தகவல்கள் தான் வெளியாகிறது. 
  தான் செல்லும் இடங்களில் எல்லாம் தயாரிப்பாளர்களை, அதன் பிறகு படங்களையே தயாரிக்க விடாமல் துரத்தியடிப்பது தான் இயக்குநர் அட்லி ஸ்டைல் என்கிறார்கள். தயாரித்த அத்தனைப் படங்களிலுமே அதிக லாபங்களைப் பார்த்த தேனாண்டாள் பிலீம்ஸ் அட்லியின் கைங்கர்யத்தில் அதள பாதாளத்தில் வீழ்ந்து கடனில் சிக்கித் தவிக்கிறது. இந்த கடனில் இருந்து மீள பல வருடங்கள் ஆகும் என்கிறார்கள். அந்த வகையில், ஏஜிஎஸ் நிறுவனம் பிகில் படத்தில் தப்பித்துக் கொண்டது என்றும் காதைக் கடிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள். படத்தின் பட்ஜெட் நிர்ணயித்ததை விட பலமுறை அதிகரித்து, விஜய் பஞ்சாயத்து பேசி, அட்லிக்கு வார்னிங் எல்லாம் கொடுத்தும் ரூ.180 கோடிகளில் வந்து நின்றது. போட்ட பணத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்து விட்டது.  ஆனால் படத்தை விநியோகித்தவர்கள் சிக்கிக் கொண்டு முழிக்கிறார்கள். 

  bigil

  கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் பிகில் படம் பெற்ற வசூல் 200 கோடி. தமிழகம் முழுவதும் படத்தை வெளியிட ரூ.70 கோடி வாங்கிக் கொண்டு கொடுத்திருக்கிறார்கள். இந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் மட்டும் பிகில் படம் வசூலித்த தொகை 90 கோடி என்றாலும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் இல்லை. காரணம் படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரங்கள், வரி போன்ற செலவினங்கள் போக கிடைத்த பணத்தில் தயாரிப்பாளர்களுடைய பங்கைப் பிரித்துக் கொடுத்த பிறகு இவர்கள் கையில் கிடைத்தது வெறும் ரூ35 கோடி தான். இவர்கள் பிகில் படத்தை வெளியிட செலவு செய்த அசல் தொகையான ரூ.70 கோடியை திரும்ப எடுக்க வேண்டுமானால் பிகில் படம் இன்னும் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல்லாக ஓடி மீண்டும் ரூ.90 கோடியை வசூல் செய்ய வேண்டும். அப்படி வசூல் செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. அதுவரையில் தமிழகத்தில் பிகில் படம் வெளியான தியேட்டர்களின் எண்ணிக்கையும் குறையக் கூடாது. இப்போதே பத்து பேருக்கும் குறைவாகவே படம் பார்க்க வருவதால் காட்சிகளை திடீரென தியேட்டரில் ரத்து செய்கிறார்கள். 

  bigil

  பணம் கொடுத்து ட்விட்டரில் நல்ல விமர்சனம் எழுத வெச்சாலும் திக்கித் திணறி படம் 5 நாட்களுக்கு மேல் ஓடுவதில்லை. இந்நிலையில் இன்னும் ரூ.90 கோடியை பிகில் தியேட்டரில் ஓடி வசூல் செய்வதெல்லாம் நடக்காத காரியம். இதனால் விரக்தியில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். விஜய் நடித்த சுறா படம் கூட வசூலில் இத்தனை கேவலமாக இல்லை. பத்து நாட்களைக் கடந்தும் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டம் வந்தது. விஜய் படம் முதல் முறையாக இந்த அளவிற்கு அதளபாதாள வசூலுக்கு சென்றுள்ளது திரையரங்கு உரிமையாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆக, பிகிலுக்காக முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பேயில்லை என்கிறார்கள். இப்போதைய நிலவரப்படி பிகில் படம் விநியோகிஸ்தர்களுக்கு ரூ.35 கோடிக்கும் மேல் நஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. இனி அட்லி படத்தை வாங்குவதற்கு முன் பல தடவை யோசிக்க வேண்டும் என்று புலம்பி வருகிறார்கள் விநியோகிஸ்தர்கள்! இன்னும் சிலரே.. பிகில் படத்தின் மூலம் விஜய், அட்லி, ஏஜிஎஸ் மட்டுமே லாபம் பார்த்துள்ளார்கள். மற்ற அனைவருக்குமே பிகில், நஷ்டத்தைத் தான் கொடுத்திருக்கிறது என்றார்.