பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பாடுகிறார்..!

  0
  5
  பிகில் இசை வெளியீட்டு விழா

  நாளை  சென்னையில் நடைபெற உள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை அவரே மேடையில் பாடி தனது ரசிகர்களை அசத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் விஜய் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

  அட்லீ இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரு வேடத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தெறி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் விஜய்-அட்லீ  கூட்டணி அமைக்கும் இரண்டாவது படம் இது. இத்திரைப்படம் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவணம் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிகில்

  ஏ.ஆர்.ரஹமான், பாடகி ஷாஷா திரிபாதி  பாடிய சிங்கப்பெண்ணே, நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இசை வெளியீட்டு விழா

  நாளை  சென்னையில் நடைபெற உள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் உள்ள பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்விக்க பாடகர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் விஜய் பாடிய வெறித்தனம் பாடலை அவரே மேடையில் பாடி தனது ரசிகர்களை அசத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா விஜய்…