பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது தடியடி! 

  0
  1
  பிகில்

  பிகில் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்படுத்த இயலாக வகையில் ரசிகர்கள் திரண்டதால் செய்வதறியாது திணறிய காவல்துறையினர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். 

  பிகில் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்படுத்த இயலாக வகையில் ரசிகர்கள் திரண்டதால் செய்வதறியாது திணறிய காவல்துறையினர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். 

  அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க ரசிகர்கள் பலர் டிக்கெட்களை அடித்து பிடித்து வாங்கி இசைவெளியீட்டு விழாவுக்கு சென்றுள்ளனர். விஜய் தனது அரசியல் அவதாரத்தை பற்றி இந்த விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  பிகில்

  ஏனெனில் மெர்சல், சர்கார் என தொடர்ந்து அரசியல் தொடர்பான கதைகளில் நடித்துவரும் விஜயின் பார்வை தமிழக அரசியல் பக்கம் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. விஜய் அரசியலுக்கு வரவேண்டும், வருவார் என அவரது தந்தையும் இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரும் தொடர்ந்து கூறிவரும் நிலையில், நடிகர் விஜய் பிகில் படம் தொடர்பான அனுபவங்களை விட அரசியலுக்கு வருவது தொடர்பான அறிவிப்பையே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘

  இந்நிலையில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரசிகர்கள் அதிகளவில் வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர், லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.