“பா. ரஞ்சித் நீங்கள் திரெளபதி படத்தை பார்க்க வர வேண்டும்” : இயக்குநர் அழைப்பு!

  0
  1
   பா. ரஞ்சித்

  இப்படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருந்தார். 

  இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில்   வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது  என்பதெல்லாம் தனிக்கதை.

  ttn

  சமீபத்தில் இப்படத்தை குடும்பத்துடன் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ், இந்நிலையில் ‘திரௌபதி’ திரைப்படம் இன்று  வெளியாகியுள்ளது. இப்படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருந்தார். 

  இந்நிலையில்  இயக்குநர்  பா. ரஞ்சித்தை ‘திரௌபதி’ திரைப்படத்தைப் பார்க்க வருமாறு, இப்படத்தின் இயக்குநர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் JSK கோபி அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து  JSK கோபி தனது டிவிட்டர் பக்கத்தில், சகோதரர் பா.ரஞ்சித் அவர்களுக்கு. நீங்கள் திரெளபதி படத்தை பார்க்க வர வேண்டும்…உங்களை திரெளபதி படம் பார்க்க வைக்க முயற்சிகள் செய்தேன்.ஆனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.அதனால் டிவிட்டர் மூலமாக அழைப்பு விடுக்கிறேன்..அனைவரும் சமம் என்ற அம்பேத்கர் அவர்களின் வார்த்தையை’ என்று பதிவிட்டுள்ளார்.

  இதை டேக் செய்த படத்தின் இயக்குநர்   ஜி. மோகன். “நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை” என பதிவிட்டுள்ளார்.