பா.ரஞ்சித்தின் தாத்தா சொத்தா அயோத்தி நிலம்..? வயிறு கலங்க வைக்கும் சம்பவம் ஆரம்பம்..!

  0
  3
  மாதிரி படம்

  அயோத்தி நிலம் குறித்து எதற்கும் இயக்குநர் பா.ரஞ்சித்திடம்  நீதிபதிகள் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் வயிறு கலங்க வைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

  அயோத்தி நிலம் குறித்து எதற்கும் இயக்குநர் பா.ரஞ்சித்திடம்  நீதிபதிகள் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் வயிறு கலங்க வைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

  pa ranjith

  சர்ச்சிக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை. ஏற்கெனவே இருந்த கட்டடத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. இஸ்லாமிய பாணியில் பாபர் மசூதி அமையவில்லை. அத்தோடு பாபர் மசூதி தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க இஸ்லாமிய அமைப்புகள் போதிய ஆதரங்களை காட்டவில்லை எனக் கூறி அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள உத்தரவிட்டனர். அதற்கு பதிலாக வக்பு வாரியம் ஏற்றுக்கொள்ளும் இடத்தை உத்தரப்பிரதேச அரசும், மத்திய அரசும் 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தனர். 

  இந்நிலையில், அயோத்தியில்  பா.ரஞ்சித் தாத்தாவின் இடத்தை அபகரித்து விட்டார்கள் என்று வழக்கு தொடர அவர் ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும், இனிமேலும் நடத்துவார் எனவும் ஒருவர் ட்விட்டரில் பதிந்துள்ளார்.  மற்றொரு பதிவில்,  ’எதற்கும் பா.ரஞ்சித் அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்..?  நீதிபதி ஐயா. என்றும்,  ’அந்த நிலத்த காட்டுங்க எங்க தாத்தா பேருல இருக்கானு பார்க்கணும்’’என  பா.ரஞ்சித் கேட்பதை போலவும் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

  ராஜராஜசோழன் தங்களது மூதாதையர்களின் பஞ்சமி நிலங்களை பறித்துக் கொண்டார் என ஏற்கெனவே பா.ரஞ்சித் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை மனதில் வைத்துக் கொண்டு நெட்டிசன்கள் தற்போது அயோத்தி தீர்ப்பை முடிச்சுப்போட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 
  அடுத்தடுத்த பதிவுகளும் வரிசை கட்டி வருகின்றன.