பா.ஜ.க.வுக்கு 170 சீட்டுக்கு மேல சல்லிக்காசு தேறாது…காங்கிரஸின் அண்டர்கிரவுண்ட் அதிரடி சர்வே…

  0
  9
  Rajya Sabha election

  நேற்று வெளியான கருத்துக்கணிப்புகள் அத்தனையும் மோடி வகையறாவுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையிலும் சற்றும் மனம் தளராத காங்கிரஸ் மேலிடம் ஸ்வீட் எடு கொண்டாடு’ என்று மைண்ட் வாய்ஸில் படு உற்சாகமாகவே இருக்கிறதாம்.

  நேற்று வெளியான கருத்துக்கணிப்புகள் அத்தனையும் மோடி வகையறாவுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையிலும் சற்றும் மனம் தளராத காங்கிரஸ் மேலிடம் ஸ்வீட் எடு கொண்டாடு’ என்று மைண்ட் வாய்ஸில் படு உற்சாகமாகவே இருக்கிறதாம். காரணம் காங்கிரஸ் ரகசியமாக எடுத்த ஒரு அண்டர்கிரவுண்ட் சர்வே.

  rahul

  கடந்த 2004, 2009, 2014ல் எடுக்கப்பட்ட எக்ஸிட் போல்களில் 90 சதவிகிதம் பலிக்கவில்லை எனும் பட்சத்தில் அதை நம்பாத காங்கிரஸ் மிக ரகசியமாக ஒரு தனியார் ஏஜென்ஸியிடம் ஒரு டீல் வைத்துக்கொண்டது.காங்கிரஸ் கட்சித் தலைமை அந்த தனியார் ஏஜென்சி மூலமாக தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்தியா முழுவதும் எடுத்துள்ள சர்வேயில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளது என்கிறார்கள். மேலும் மத்திய உளவுத் துறை அதிகாரிகளிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள நம்பகமான தகவல்களின் படி பாஜக 170 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்றும் காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டியை எளிதில் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  rahul

  மிக சாமர்த்தியமாக, இந்த தேர்தலில் பரப்புரை உள்ளிட்ட அத்தனை பணிகளையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைத்துவிட்ட சோனியா காந்தி தனது தொகுதியான ரேபரேலியில் மட்டுமே கவனம் செலுத்தினார்.இந்நிலையில் பாரபட்சமற்ற தனியார் ஏஜென்சியின் ரிப்போர்ட் மற்றும் மத்திய உளவுத் துறையின் நம்பகமான தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே திடீரென மே 23ஆம் தேதி இரவு பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொள்ளும் கூட்டத்தை டெல்லியில் கூட்டியிருக்கிறார் சோனியா காந்தி.

  sonia

  எக்ஸிட் போல்கள் தந்த மகிழ்ச்சியால் மோடி கோஷ்டி வெற்றி உற்சாகத்தில் மிதக்க சோனியாவோ ராஜதந்திரமாக 23ம் தேதி கூட்டத்தில் மோடியை வீழ்த்தும் வியூகத்துக்கு முழு வீச்சில் தயாராகிவிட்டார் என்பதுதால் லேட்டஸ்ட் தகவல்.