பா.ஜ.க.,வின் அதிகாரத்தை பஸ்பமாக்கும் எடப்பாடி… தமிழகத்தில் கெத்துகாட்ட மாஸ்டர் பளான்..!

  0
  1
  மோடி

  பா.ஜ.க.,வின் ஆசிர்வாதம் ஓ.பி.எஸுக்கு இருந்தாலும் உள்ளூரில் செல்வாக்கை நிரூபித்து இந்த விஷயத்தில் பா.ஜ.க.,வை செல்லாக் காசாக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.!

  அதிமுக கட்சியின் பொதுக்குழு சுமூகமாக முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது. அதிமுகவின் தற்போதையை ‘பை-லா’ திடீரென திருத்தப்படலாம் என்ற சந்தேகம் முக்கிய நிர்வாகிகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது. 

  அதில் முக்கிய தலைவர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கிறார்கள். இதனை உணர்ந்த  அவரும் உற்சாகமாக இருக்கிறார். எனவே, அதற்குள் மற்றவர்களை சமாதானப்படுத்தி பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்து ஒற்றை தலைமை என்கிற முடிவோடு கூட்டத்தை முடிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். 

  OPS

  அதனால் இந்த விஷயங்கள் எல்லாம் சுமூகமாக முடிந்த பிறகு தான் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதனால் இப்போதைக்கு கட்சி நிர்வாகிகளை கைப்பிடிக்குள் கொண்டு வரும் நடவடிக்கை தான் நடந்து வருகிறது. ஒருவேளை கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் துணை முதல்வர் ஓ.பி.எஸ் நிலைமை அதிமுகவில் கேள்விக்குறியாகி விடும்.  

  ops

  பா.ஜ.க.,வின் ஆசிர்வாதம் ஓ.பி.எஸுக்கு இருந்தாலும் உள்ளூரில் செல்வாக்கை நிரூபித்து இந்த விஷயத்தில் பா.ஜ.க.,வை செல்லாக் காசாக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.!