பா.ஜ.க பக்கம் சாயும் கலைஞரின் மகன் : மோடிக்கு கூறிய வாழ்த்து இதுதான்!?

  13
  அழகிரி

  பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்க உள்ளதற்கு முக அழகிரி வாழ்த்து கூறியுள்ளார். 

  பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்க உள்ளதற்கு முக அழகிரி வாழ்த்து கூறியுள்ளார். 

  modi

  பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 300ற்கும் மேற்பட்ட  இடங்களைக்  கைப்பற்றியது. இதனால் மீண்டும் மத்தியில் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக வரும் 26 ஆம்  தேதியன்று மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதிமுக  தேனி தொகுதியில் மட்டும்  வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக 38 தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வெற்றி பெற்றவர்களுக்குப் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

  alagiri

  இந்நிலையில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ள மோடிக்கு, கருணாநிதியின் மகனும், முக ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரி வாழ்த்துக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ‘மக்களவை தேர்தலில் நீங்கள் அடைந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள். நாட்டின் நலனுக்காக நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் மீண்டும் பிரதமராவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  stalin

  முன்னதாக தேர்தலுக்கு முன் திமுக மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் படுதோல்வி அடையும் என்று அழகிரி கருத்து கூறியிருந்தார். அதே போல் தேர்தலுக்கு பிறகு அழகிரி திமுக தலைவர் ஆவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம் சொன்னார். ஆனால்  எந்த பிரச்சனை இருந்தாலும்  தந்தை இல்லாத நேரத்தில் தம்பி  வெற்றுவிட்டானே  என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் பாஜகவுக்கு வாழ்த்து கூறுகிறாரே. ஒருவேளை பாஜக பக்கம் சாய்ந்து விடுவாரோ’  என்று திமுக விசுவாசிகள் கடுப்பில் உள்ளார்களாம்.