பா.ஜ.க. ஒன்றும் காங்கிரஸ் இல்லை! அதனை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது- அமித் ஷா

  0
  5
  அமித் ஷா

  பா.ஜ.க. ஒன்றும் காங்கிரஸ் இல்லை. அதனை யாரும் பின்னால் இருந்த இயக்க முடியாது. டிசம்பருக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் தற்போதைய தலைவருமான அமித் ஷா தெரிவித்தார்.

  2014ல் பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித் ஷா பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு பா.ஜ.க. அசுர வளர்ச்சி பெற்றது. பல மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற காரணமாக விளங்கியவர் அமித் ஷா. பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அமித் ஷா மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதால் கட்சியின் தலைவர் பதவியை விட்டு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

  பா.ஜ.க.

  இதற்கிடையே அதற்கு முன்னோட்டமாக பா.ஜ.க. செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டார். அமித் ஷா தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் தனக்கு ஆதரவான நபரை நியமனம் செய்து திரைக்கு பின்னால் இருந்து அவரை ஆட்டுவிப்பார் என பரவலாக பேசப்பட்டது. இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் முறையாக இது குறித்து அமித் ஷா பேசியுள்ளார்.

  ஜே.பி. நட்டா

  இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில், பா.ஜ.க. ஒன்றும் காங்கிரஸ் அல்ல. பா.ஜ.க.வை யாராலயும் திரைக்கு பின்னால் இருந்து இயக்க முடியாது. கட்சி தனது சட்டதிட்டத்தின்படி இயங்கும்.  தேர்தல்கள் (நிறுவன) நடைபெற்று வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் மற்றும் கட்சி விவகாரங்களை பொறுப்பேற்பார் என தெரிவித்தார்