பாலோ-ஆன் தவிர்க்க முடியாமல்… தென்னாபிரிக்கா பேட்டிங்..!

  0
  11
  இந்தியா-தென்னாப்பிரிக்கா

  தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களை கடக்க முடிந்தது. ஆனாலும், இவர்களால் நீண்ட நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. 

  முதல் இன்னிங்சில் பாலோ-ஆனை தவிர்க்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

  புனேவில் நடைபெற்றுவரும் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி கடும் சரிவை சந்தித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களுக்கு உள்ளேயே ஆட்டம் இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

  savsind

  ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மகாராஜா மற்றும் பிலாந்தர் இருவரும் சற்று நிதானித்து ஆடி 100 ரன்கள் சேர்த்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களை கடக்க முடிந்தது. ஆனாலும், இவர்களால் நீண்ட நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. 

  இறுதியாக, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்களுக்கு சுருண்டது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

  insvssa

  நான்காம் நாள் துவக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இரண்டாவது இன்னிங்சை தொடர்வாரா? அல்லது தென் ஆப்பிரிக்காவை ஃபாலோ-ஆன் மேற்கொள்ள செய்வாரா? என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடராமல் தென்னாப்பிரிக்க அணியை ஆட பணித்தது.  

  நான்காம் நாள் துவக்கத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி தற்போது ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.