பாலிவுட் ரீமேக் படத்தில் தாராள பிரபுவாக மாறிய ஹரிஷ் கல்யாண்

  0
  1
  ஹரிஷ் கல்யாண்

  நடிகர் ஹரிஷ் கல்யாண்  நடித்து வரும் பாலிவுட் படத்தின் ரீமேக் திரைப்படத்திற்கு  தாராள பிரபு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண்  நடித்து வரும் பாலிவுட் படத்தின் ரீமேக் திரைப்படத்திற்கு  தாராள பிரபு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ ஆகிய படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

  இதற்கிடையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘விக்கி டோனார்’  படத்தை இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து தமிழில் ரீமேக் செய்து வருகிறார். தற்போது அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் ஹரிஷ் கல்யாணும், யாமி கவுதம் கேரக்டரில் பிரபல நடிகை ஒருவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

  vicky

   

  மேலும் இப்படத்திற்கு ‘தாராள பிரபு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் இப்பாடம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, சுமார் ரூ.65 கோடி வரை வசூல் சாதனை செய்துதிருப்பது குறிப்பிடத்தக்கது.