பாலிவுட் பிரபலங்களுடன் கால்பந்தாடிய ‘தல’ தோனி..!

  0
  2
  MS Dhoni

  கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் கால்பந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி டிரென்ட் ஆகியுள்ளது.

  கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் கால்பந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி டிரென்ட் ஆகியுள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடிவந்தார். இந்நிலையில், உலக கோப்பை தொடரில் அறையிருதியுடன் இந்தியா வெளியேறியது. இதனால், உலகக்கோப்பை முடிவுற்ற பிறகு, தோனி நிச்சயம் ஓய்வு பெறுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. 

  MS Dhoni

  ஆனால், தொடர்ந்து மௌனம் காத்துவந்த தோனி இராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து இரண்டு மாத காலம் ஓய்வு எடுக்க இருப்பதாகவும் அதிரடியாக அறிவித்தார். விடுப்பு முடிந்த பிறகு, மீண்டும் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு மேலும் இரண்டு மாத காலம் விடுப்பை நீட்டித்து குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார்.

  Dhoni

  இதற்கிடையில், மும்பையில் ஜூகு பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் பாலிவுட், சின்னத்திரை மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலர் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் விடுப்பில் இருக்கும் தோனியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அவர்களுடன் கால்பந்து விளையாடினார். 

  குறிப்பாக, இந்த போட்டியில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் ஆகியோருடன் தோனி விளையாடினார். இதை அங்கிருந்த ரசிகர்கள் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது தற்போது மிகவும் டிரெண்டாகி வருகிறது.

  Dhoni

  தோனிக்கு கால்பந்தின் மீது இருக்கும் ஆர்வம் அனைத்து ரசிகர்களும் அறிந்த ஒன்று. நீண்ட நாட்களாக தோனி விளையாடுவதை காணாத ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை பார்த்ததும் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.