பாலில் ‘டாய்லெட்’க்கு பயன்படுத்தப்படும் தண்ணீர்.. எழும்பூர் ஸ்டேஷனில் நடந்த அவலம்.. வைரல் வீடியோ!

  0
  4
  mixing water

  ரயில்களின் கழிவறைக்குத் தண்ணீர் நிரப்பப் பயன்படுத்தப்படும் குழாயிலிருந்து, ஒரு கேனில் தண்ணீர் பிடித்து வந்து அதனைப் பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருக்கும் நபர் ஒருவர், ரயில்களின் கழிவறைக்குத் தண்ணீர் நிரப்பப் பயன்படுத்தப்படும் குழாயிலிருந்து, ஒரு கேனில் தண்ணீர் பிடித்து வந்து அதனைப் பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

  ttn

  அந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘இது இரவு 9.25 மணியளவில் சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை எண் 7 இல் நடந்தது. அவர் என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள், பாலில் கழிவறைக்குப் பயன்படுத்தும் நீரை சேர்க்கிறார். விழிப்புடன் இருங்கள். கவனமாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

  சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் இந்த வீடியோவிற்கு சென்னை ரயில்வே மேலாளர் விளக்கம் அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதனைப் பற்றிய புகார் வந்த உடனேயே டீக்கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதாகவும், அந்த கடைக்காரர் பிடித்து வந்த தண்ணீரைப் பாலில் ஊற்றவில்லை, பாய்லரில் தான் ஊற்றுகிறார் என்றும் அதனால், அந்த தண்ணீர் பாலில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  இருப்பினும், அவர் கழிவறைக்குப் பயன்படுத்தும் நீரை பாய்லரில் ஊற்றியது தவறு என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், சென்னை ரயில்வே மேலாளர் கூறியபடியே இன்று காலை அந்த டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.