பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் !

  0
  1
  child abuse

  இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து  நடவடிக்கை எடுக்கத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்கள் திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

  சமீப காலமாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படாததால் அக்குற்றம் அதிகரித்து வருகின்றன. தினந்தோறும் ஒரு குழந்தை நாட்டில் ஏதோ ஒரு பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

  ttn

  சமீபத்தில் ஆந்திராவில் திஷா சட்டம் நிறைவேறியது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கயவர்களுக்கு 21 நாட்களுக்குள் தக்க தண்டனை வழங்கப்படும். இதே போல, தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

  ttn

  பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களைக் கைது செய்யும் போக்சோ சட்டம் 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து  நடவடிக்கை எடுக்கத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்கள் திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

  ttn

  அதன் படி, இன்று 14 ஆவது நீதிமன்றமாக நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் போக்சோ நீதிமன்றம் திறக்கப்பட்டது. அதனையடுத்து, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் போக்சோ நீதிமன்றம் திறக்கப்பட்டது. அதனைச் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தனர். அந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.