பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மரத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கிய பெண்!

  0
  4
  மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் பெண்

  கணவருக்குத் தெரிந்தால் பிரச்சனையாகும் என்று நினைத்து பொறுமை காத்த அந்த பெண் ஒருகட்டத்தில்  ஸ்ரீசைலம் குறித்து கணவரிடம் கூறியுள்ளார்

  நல்கொண்டா: பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அப்பெண் சரமாரியாக அடித்து துவைத்துள்ளார். 

  ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் அத்தால பாவி பகுதியைச் சேர்ந்த  ஸ்ரீசைலம் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த பெண் செல்லும் போது தகாத வார்த்தை பேசுவது, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவருக்குத் தெரிந்தால் பிரச்சனையாகும் என்று நினைத்து பொறுமை காத்த அந்த பெண் ஒருகட்டத்தில்  ஸ்ரீசைலம் குறித்து கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து  அந்த பெண்ணின் கணவர் வீடு முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்துக் கண்காணித்துள்ளார். 

  attack

  இந்நிலையில் ஸ்ரீசைலம் மீண்டும் அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முற்படும் போது அப்பெண்ணின் கணவர், அப்பகுதி மக்கள் உதவியுடன் ஸ்ரீசைலத்தை பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து கணவன் மற்றும் மனைவி இருவரும்  அந்த நபரை மாற்றி மாற்றி ஷூ, கம்பு உள்ளிட்ட பொருட்களால் அடி வெளுத்தனர். இதனால் வலிதாங்க முடியாமல்  ஸ்ரீசைலம் அவர்களின் காலில்  விழுந்து கெஞ்சியுள்ளார். 

  harassment

  இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அத்தால பாவி கிராம போலீசார் ஸ்ரீசைலத்தை விசாரித்து வருகின்றனர்.