பாரிஸ் பறக்கும் தமிழக அமைச்சர்கள்! இது இரண்டாவது ரவுண்டு பா…

  0
  1
  minister udhayakumar

  நாளை இரவு ஒன்பது மணி விமானத்தில் அமைச்சர்கள்  ஆர்.பி உதயகுமார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் உதவியாளர் கிரிதரன் ஆகியோர் பாரிஸ்க்கு பயணம் மேற்கொள்கின்றனர். 

  நாளை இரவு ஒன்பது மணி விமானத்தில் அமைச்சர்கள்  ஆர்.பி உதயகுமார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் உதவியாளர் கிரிதரன் ஆகியோர் பாரிஸ்க்கு பயணம் மேற்கொள்கின்றனர். 

  முதற்கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சென்றுள்ளார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றுள்ளார். இவரை தவிர வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

  Rajendra balaji

  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது பின்லாந்தில் அங்குள்ள கல்வி முறையை அறிந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிரிஷ்ணன் ஆகியோர் பிரான்ஸ், அமெரிக்கா செல்ல இருக்கின்றனர்.