பாய்காட் பதஞ்சலி… விழி பிதுங்கும் பாபா ராம்தேவ்!

  0
  4
  பதஞ்சலி

  தமிழகத்தில் மட்டும் தான் என்றில்லாமல் நாடு முழுவதுமே பேசுவதற்கு மேடை கிடைத்தால் அரசியல் தலைவர்களும், ஆன்மிகவாதிகளும், பொது வாழ்வில் ஈடுபடுபவர்களும் சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை உண்டு செய்கிறார்கள். சமீபத்தில் இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள் குறித்து திருமாவளவன் பேசியிருந்த கருத்து கடும் எதிர்ப்பலைகளை உண்டு செய்திருக்கும் நிலையில், யோகா குரு பாபா ராம் தேவ், டாக்டர் அம்பேத்கார், பெரியாரை ஆதரிப்பவர்கள் அனைவருமே அறிவார்ந்த தீவிரவாதிகள் என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசியிருந்தார்.

  baba ramdev

  பாபா ராம்தேவ்வின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் பயங்கர கண்டனங்கள் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் பலரும் தொடர்ந்து பாபா ராம்தேவ்விற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த பேட்டியில், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியாரின் கொள்கைளை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தனக்கு கவலை தருவதாகவும், அவர்களைப் பார்த்தால் தனக்கு பயமாக இருப்பதாகவும் பேசியிருந்தார். 
  இதையடுத்து ட்விட்டர், பேஸ்புக் சமூக வலை தளங்களில் ராம்தேவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.  இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தந்தை பெரியார் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக போராடினார். பெண் உரிமைக்கு குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராக பேசினார்.

  patanjali

  அவரது கொள்கைகளை தி.மு.க. பாதுகாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, பாபா ராம்தேவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் குவிகின்றன. பாய்காட் பதஞ்சலி என்கிற ஹேஷ்டேக் நேற்று இந்தியளவில் டிரெண்டானது. இந்தியா முழுவதும் கட்சித் தலைவர்கள் பாபா ராம்தேவ் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பதஞ்சலி கடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.