பாமகவுக்கு பயந்தால் வெள்ளாமை வீடு வந்து சேராது… ரஜினிக்கு எச்சரிக்கை..!

  0
  4
  ரஜினிகாந்த்

  ரஜினிக்கு அதிமுக – பாஜக கூட்டணிதான் கரை சேர்க்கும். அதனை விடுத்து பாமகாவுக்கு பயந்து கூட்டணி சாயலை மாற்றினால் அடுத்து சிவாஜி நம்ம ரஜினியாகத்தான் இருப்பார்.

  ரஜினி ஒருபோதும் சாதி அடிப்படையிலான கூட்டணியை தொடங்க மாட்டார். பாமக போன்ற சாதிக்கட்சிக்கு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து கிடைக்கும் ஓட்டுக்களை ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போது அந்த மிரட்டல்களுக்கு பயப்படாமல் ரஜினிக்கே வாக்களிப்பார்கள் என்கிற நிலை உருவாகும்.

  rajini

  ரஜினி மக்களை நம்பாமல் அரசியல் கட்சிகளை நம்புவார் என்றால் பத்தோடு பதினொன்றாகி விடும் அவரது கட்சி. அந்த தவறை ரஜினி செய்ய மாட்டார். அதே சமயம் ரஜினியின் பின்னே இருக்கும் சில மன்ற தலைவர்களுக்கு அரசியல் அனுபவம் ஏதும் இல்லாத நிலையில் ரஜினி அவர்களை நம்பி அல்லது அவர்களை ஆலோசனையை கேட்பார் என்றால் அது சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும். சிறுசுகள் வெள்ளாமை வீடுவந்து சேராது என்பது போல.

  ரஜினிக்கு அதிமுக – பாஜக கூட்டணிதான் கரை சேர்க்கும். அதனை விடுத்து பாமகாவுக்கு பயந்து கூட்டணி சாயலை மாற்றினால் அடுத்து சிவாஜி நம்ம ரஜினியாகத்தான் இருப்பார். அரசியல் சிவாஜி, ரஜினி என்று இப்போதே உறுதிபட சொல்லலாம். இந்த விபரீத அரசியல் வேண்டாம்’’ என்கிறார் பாமகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர்.