பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

  0
  4
  vivo

  பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  டெல்லி: பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகின் முதல் 32 மெகா பிக்சல் கொண்ட பாப்-அப் செல்ஃபி கேமரா உடைய ஸ்மார்ட்போனாக விவோ வி15 ப்ரோ வெளியாக உள்ளது. நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஃப்னிஷிங்கை கொண்டுள்ளது. பிப்.20-ஆம் தேதிக்குள் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

  விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் தொடர்பான டீச்சர் வீடியோவில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தோன்றி நடித்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் அமைந்திருக்கும் மூன்று கேமராக்களும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்குவதுபோல் அமைந்திருக்கிறது. முன்னதாக பாப்-அப் செல்ஃபி கேமரா பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.