பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று… சென்னையில் மட்டும் 15  ஆயிரம் போலீசார் குவிப்பு!

  0
  3
  பாபர் மசூதி

  பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது.

  பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது.
  1992ம் ஆண்டு இதே தினத்தில்தான் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் நினைவு தினம் இன்று இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படுகிறது. அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இஸ்லாமியர்கள் அமைதி காத்தனர். தங்களுக்கு அந்த தீர்ப்பில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெரிய அளவில் அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. சட்ட ரீதியாக எதிர்கொள்வது என்று அமைதியாக இருந்து வருகின்றனர்.

  babar

  இருப்பினும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் வன்முறைகள் ஏற்படுத்த தீயசக்திகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாட்டின் முக்கியமான இடங்கள், விமானநிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம், கோவில், மசூதி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர பரிசோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

  police

  சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணிக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் வாகனத் தணிக்கை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், சந்தேகத்துக்கு இடமான நபர்கள், பொருட்களைக் கண்டால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள், பைகளை தொட வேண்டாம். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல், சமூக ஊடகங்களில் வரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தகவலை நம்ப வேண்டாம். எதுவாக இருந்தாலும் போலீசாரைத் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். 

  vishwa

  இந்து அமைப்புக்கள் சிலவும் இன்று வழக்கமாக நடத்தும் வெற்றி விழாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. குறிப்பாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதியை வெற்றி விழாவாக கொண்டாடி வந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு கோவில் கட்ட சாதகமாக வந்துள்ளதால் இனி இந்த கொண்டாட்டம் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.