பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

  0
  1
  Pan With aadhar

  வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய போன்றவற்றுக்கு பான் எண் அவசியம். இந்த பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

  வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ய போன்றவற்றுக்கு பான் எண் அவசியம். இந்த பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

  pan

  மேலும் அதற்கான காலக்கெடுவை பலமுறை நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த மத்திய பட்ஜெட்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 

  1. வருமான வரித் துறை இணைய தளத்திற்கு முதலில் செல்ல வேண்டும் (https://www.incometaxindiaefiling.gov.in/home)

  2. அதன் இடதுபுறத்தில் உள்ள Link Aadhaar என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.

  3. இப்போது உங்களுக்கு புதிதாக ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கும்.

  4. அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் கட்டத்தில் உங்களது பான் எண்ணை நிரப்ப வேண்டும். இரண்டாவது கட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.

  5. மூன்றாவது கட்டத்தில் ஆதாரில் உங்களது பெயர் எப்படியிருக்கிதோ அதனை அப்படியே எழுத வேண்டும்.

  6.கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சா கோடை (captacha code) நிரப்ப வேண்டும்

  7. பார்வையற்றவர்களின் வசதிக்காக கேப்சா கோடிற்கு பதிலாக ஒன் டைம் பாஸ்வேர்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கேப்சா கோடை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு வசதியை பயன்படுத்தலாம்’

  8. இதனை நிரப்பிட்டு லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் உங்களது ஆதார் பான் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.