பாதுகாப்புக்கு 52,000 பேர்! டான்ஸ் ஆட 42,000 மாணவிகள்! அதகளப்படுத்தும் தமிழக அரசு!

  0
  1
  பிரதமர் மோடி

  சென்னைக்கு வருகை தரும் சீன அதிபரை வரவேற்க வரலாறு காணாத வகையில், ஜெயலலிதாவின் மகாமகம், டயருக்கு கும்பிடு, வழி நெடுக வாழை மரங்கள் என்கிற எல்லா கலாசாரங்களையும் மிஞ்சும் வகையில் தமிழக அரசு தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

  சென்னைக்கு வருகை தரும் சீன அதிபரை வரவேற்க வரலாறு காணாத வகையில், ஜெயலலிதாவின் மகாமகம், டயருக்கு கும்பிடு, வழி நெடுக வாழை மரங்கள் என்கிற எல்லா கலாசாரங்களையும் மிஞ்சும் வகையில் தமிழக அரசு தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இம்மாதம் 11 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கலாச்சாரம், இருநாட்டு உறவுகள், பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கான முன்னேற்பாடாக, இருநாட்டு தலைவர்களையும் வரவேற்க சுமார் 52 ஆயிரம் பேரை அரசு தயார் படுத்தியுள்ளது.  

  rally

  விமான நிலையத்திலிருந்து ஐடிசி சோழா நட்சத்திர ஓட்டல் வரை சீன அதிபரை வரவேற்க 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், அதன் பின்னர் மாலை ஐடிசி சோழா ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் வரையில் 49 கிலோ மீட்டர் தொலைவிற்கு வழிநெடுகிலும் 46 ஆயிரம் மாணவிகள்,  மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என நிற்க வைத்தும், ஆடிப்பாடி வரவேற்பு தரவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. சாலையின் இருபுறங்களிலும் மூவண்ணக் கொடி மற்றும் சீன கொடிகளை அசைத்து காட்டி வரவேற்பார்கள். வழிநெடுகிலும் ஆண்கள் பெண்களின் செண்டை மேளம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவரை வரவேற்கும் விதமாக வாழை மற்றும் கரும்பில் ஆன வளைவுகளையும் அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.  வரவேற்பு தர்றதுல நம்மளை மிஞ்சுவதற்கு ஆளேயில்லை என்று மோடி நினைக்கனும்’ என்கிற ரீதியில் காரியங்கள் படுஜோராக நடந்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விட்டா  சீன அதிபர் மாமல்லபுரத்தைச் சுற்றிப் பார்த்து அவர் நாட்டுக்கு போனதுக்கு அப்புறமும், அங்கேயும் இது மாதிரி அரசியல்ல புது கலாசாரத்தை பயன்படுத்தி மாநாடு நடத்த வெச்சுடுவாங்க போல இருக்கே’ என்று புலம்பி வருகிறார்கள் பொதுமக்கள்!