‘பாட்டிகளை’ கவர்வதில் கமல்… ‘தண்ணி’ விஷயத்தில் ரஜினி… காப்பியடித்து கலக்கும் மு.க.ஸ்டாலின்..!

  25
   முக ஸ்டாலின்

  நமக்கு நாமே, பயணத்தை விட்டு விட்டு விடியல் மீட்பு பயணத்தை தேர்தலுக்கு முன் தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  நமக்கு நாமே, பயணத்தை விட்டு விட்டு விடியல் மீட்பு பயணத்தை தேர்தலுக்கு முன் தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், அதற்கும் முன்பே கிராம சபை கூட்டம் என்கிற பெயரில் கிளம்பி விட்டார் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன்.

  kamal

  கிராமம் கிராமமாக சென்று மக்களுடன் அமர்ந்து பேசுவது என கிராமம் கிராமமாக சென்று வந்தார் கமல்ஹாசன். இதற்கு ஏற்பட்ட ஆதரவை அடுத்து,அதே பாணியில் தனது விடியல் மீட்பு பயணத்தை மாற்றிக் கொண்டார் ஸ்டாலின்.

  stalin

  ஊர் ஊராக சென்று மேடையில் பேசி வந்த ஸ்டாலின் கமல் ஹாசன் வழியில் தெருத்தெருவாக சென்று மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து உரையாடுவது, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது, திண்ணைகளில் அமர்ந்து முதியவர்களிடம் குசலம் விசாரிப்பது என தனது பாணியை மொத்தமாக மாற்றிக் கொண்டார் மு.க.ஸ்டாலின். இதனால் பொங்கி எழுந்த கமல் ஹாசன் எனது பயணத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் காப்பி அடிப்பதாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.

   

  rajini

  இப்போது ரஜினி டர்ன். வட சென்னை பகுதியில், கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர் டேங்கர் லாரி மூலம் இலவசமாக குடிநீர் சப்ளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.  

  stalin

  அந்த லாரிகளில் ரஜினி படத்துடன் மக்கள் மன்றம் பேனரை ஒட்டி இருக்கிறார்கள். சமீபத்தில், தனது தொகுதியான கொளத்துார் தொகுதியில் இதே போல் இலவச குடிநீர் திட்டத்தை, ஸ்டாலின் துவங்கினார். அந்த லாரியில் ஸ்டாலின் படத்தை பெரிதாக போட்டு ஒட்டியிருந்தார்கள்.

  mkstalin

   இதை பார்த்த ரஜினி ரசிகர்கள், இவ்வளவு வருஷமாக, பொது வாழ்க்கையில் இருக்கிறவர்கள், எங்களை காப்பி அடித்து தான், இலவச குடிநீர் தரணுமா? என கிண்டல் அடிக்கிறார்கள்.ஆக மொத்தத்தில் கமலை சுற்றுப்பயணத்தில் காப்பி அடித்தவர்கள், தண்ணீர் பிரச்னையில் ரஜினி ரசிகர் மன்றத்தை காப்பி அடித்து விட்டார்கள் திமுகவினர்.