பாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்

  0
  19
  திருவேட்களம்

  சிதம்பரத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவேட்களம்.

  சிதம்பரம்: சிதம்பரத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவேட்களம். இங்கு வேடன் வடிவில் இருந்த சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் போர் நிகழ்ந்ததால் இந்தத் தலத்துக்கு மகாயுத்த களம் என்றொரு பெயரும் உண்டு.மூங்கில்வனம் என்றும் அழைத்திருக்கிறார்கள்.அதெல்லாம் பழங்காலப் பெயர்கள்.

  இப்போது இந்தப் பகுதி,அண்ணாமலை நகர் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் பரப்பளவு ஒரு ஏக்கர்.கோவிலில் கிழக்கு நோக்கி இருக்கும் சுயம்புலிங்கமாக பாசுபதேசுவரர் இருக்கிறார்.இறைவு நல்ல நாயகி.கோவிலின் எதிரில் உள்ள குளம்,கிருபா கடாட்ஷ தீர்த்தம்.தல மரம் மூங்கில்.இதனாலேயே இத்தலத்துக்கு மூங்கில்வனம் என்கிற பெயரேற்பட்டது.

  thiruvetkalam

  அந்த மூங்கில் வனத்தில் பாசுபதா அஸ்த்திரம் என்கிற அஸ்த்திரம் வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான்.அப்போது துரியோதனனால் ஏவப்பட்ட முகாசுரன் என்பவன் கொடூரமான பன்றி உருக்கொண்டு இந்தகாட்டுக்குள் வருகிறான்.அவனால் அர்ஜுனனுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று நினைத்த சிவன் வேடன் உருவம் கொண்டு காட்டுக்குள் வந்து முகாசுரனை தாக்குகிறார்.

  thiruvetkalam

  மறுபுறம் அர்ஜுனனும் அந்த பன்றி உருவில் இருக்கும் முகாசுரனைத் தாக்குகிறான்.முகாசுரன் உயிருக்கு பயந்து ஓடி அங்கே தஞ்சமடைகிறான். அங்கே வரும் அர்ஜுனனும் வேடன் உருக்கொண்ட சிவனும் அந்த பன்றி தனக்குத்தான் சொந்தம் என்று வாக்குவாதம் செய்கிறார்கள்.அதை தொடர்ந்து இருவரும் யுத்தம் செய்கிறார்கள்.அப்போதுதான் அர்ஜுனனுக்கு தான் போர் செய்வது இறைவனிடம் எனத் தெரிகிறது.

  thiruvetkalam

  ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வணங்கி நிற்கிறான்.இறைவன் அவனுக்கு பாசுபதாஸ்வர அஸ்த்திரத்தை வழங்குகிறார்.இதை சித்தரிக்கும் விதமாகதிருவேட்களம் கோவிலின் முன்மண்டபத்தில் இறைவன் வேடுவன் உருவில் தேவியுடன் நாய்கள் தொடர நடந்து போகும் சிற்பமும்,அர்ஜுனனுடன் போரிடும் சிற்பமும் அமைத்திருக்கிறார்கள்.

  thiruvetkalam

  வேடுவ வடிவில் தேவியுடன் கையில் பாசுபதாஸ்த்திரம் ஏந்தி நிற்கும் உற்சவர் சிலையும் இருக்கிறது.அர்ஜுனனுக்கும் இங்கே உற்சவ விக்கிரகம் உண்டு. பினாகம்,சாரங்கம்,காண்டீபம் என்கிற மூன்று விற்களும் உருவானது இந்தத் தலத்தில்தான். திருஞானசம்பந்தர் இங்கே தங்கி இருந்து, நாள் தோறு தில்லைக்குச் சென்று சிவனை வழிபட்டதாக பெரிய புராணம் சொல்கிறது.திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரும் இத்தலத்தை பாடி இருக்கிறார்கள்.தேவாரப் பதிகம்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2 வது தலம்.