பாஜக வெற்றியை தொடர்ந்து அத்வானி காலில் விழுந்த மோடி!?

  0
  1
  அத்வானி மோடி சந்திப்பு

  மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 

  புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 

  modi

  மக்களவை தேர்தலில் பாஜக 300ற்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதனால் மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். இதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். 

  modi

  இந்நிலையில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அக்கட்சியின் தலைவர்  அமித்ஷா ஆகியோர்  டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வீட்டுக்குச் சென்றனர்.அப்போது அவரை  வாசல் வரை வந்து வரவேற்ற அத்வானியின் காலில்  விழுந்து ஆசி வாங்கினார் மோடி. இந்த சந்திப்பு குறித்துப் பேசிய அவர், இது போன்ற மூத்த தலைவர்களால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம் என்றார்.

   

  இதே போல் பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி இல்லத்துக்கும் பிரதமர் மோடி சென்று  ஆசி வாங்கியது குறிப்பிடத்தக்கது.