பாக். பிரதமர் இம்ரான் கான் பதவி விலக கோரி.. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்!

  0
  4
  Pakistan pm

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர் பிலால் போட்டோ போராட்டம் நடத்த தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர் பிலால் போட்டோ போராட்டம் நடத்த தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.

  பாகிஸ்தானில் உள்ள கர்சஸ் பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 150 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் தங்கள் கை, கால்களை இழந்து தற்போது வரை தவித்து வருகின்றனர். இதன் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ பங்கேற்று மக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.

  பாகிஸ்தான் போராட்டம்

  அப்போது பேசிய அவர், “பாகிஸ்தான் இதுவரை பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வந்தது. தற்போது ஜனநாயகத்தையும் இழந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க தற்போதிருக்கும் பிரதமர் இம்ரான் கானின் கையாலாகாத்தனமே காரணம். விரைவில் அவரிடம் இருந்து பாகிஸ்தானை மீட்டெடுத்து, மக்களுக்கு உரிய நல்லது கிடைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்” என்றார். 

  மேலும் பேசிய அவர், மக்களின் நம்பகத்தன்மையை இம்ரான்கான் பெற தவறிவிட்டார். இருப்பினும் அவரை தொடர்ந்து பதவியில் நீடிக்க வைத்திருப்பது முறையற்றது. ஆதலால் பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து அவரை விரைவில் வெளியேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 

  இதன் முதல் கட்டமாக, வருகிற அக்டோபர் 23, 26 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் தார், கஷ்மோர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் தற்போதைய அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த இருக்கிறோம். இதற்கு பொதுமக்களாகிய நீங்கள் கூறிய ஆதரவை அளிக்க வேண்டும். பாகிஸ்தானை விரைவில் மீட்டெடுக்க எங்களுக்கு தக்க உதவி புரிய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

  தற்போதைய அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையில் போராட்டங்களை நடத்த எதிர்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தொடர்ந்து திட்டமிட்டு வருகிறார். இவருக்கு ஆதரவு கரங்களும் வலுத்த வண்ணமே இருக்கின்றன.