பாக். பிரதமர் இம்ரான்கானை சொந்த விமானத்தில் அமெரிக்கா அனுப்பிவைத்த சவுதி இளவரசர்..!! காரணம் என்ன?

  0
  1
  இம்ரான்கான்

  சவுதி அரேபிய விருந்தாளியாக இம்ரான் கான் வந்துள்ளதால், சவுதி இளவரசரின் சொந்த விமானத்தில் இம்ரான் கான் அமெரிக்கா செல்ல வற்புறுத்தப்பட்டுள்ளார்

  சவுதி அரேபியாவிலிருந்து சொந்த விமானம் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளார் சவுதி இளவரசர்.

  imran

  இரண்டு நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸை சந்தித்து பலதரப்பட்ட விஷயங்களை பேசியுள்ளார்.

  அதில், காஷ்மீர் குறித்து பேசியதாகவும், மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாகிஸ்தானில் தொழில் துவங்குவதற்கான முதலீடு ஆகியவை குறித்தும் பேசப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகின. 

  pakistan

  சவுதி அரேபியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு, 7 நாட்கள் பயணமாக இம்ரான்கான் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து, நேற்று சவூதி மன்னரிடம் சந்திப்பை முடித்து விட்டு பயணிகள் விமானத்தில் இம்ரான் கான் திட்டமிட்டபடி செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். 

  இதற்கிடையில் சவுதி அரேபிய விருந்தாளியாக இம்ரான் கான் வந்துள்ளதால், சவுதி இளவரசரின் சொந்த விமானத்தில் இம்ரான் கான் அமெரிக்கா செல்ல வற்புறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக சவுதி இளவரசரின் சொந்த விமானத்தில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

  imran

  அமெரிக்காவில் தற்போது 74ஆம் ஐநா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் வருகிற 27ஆம் தேதி இம்ரான் கான் சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இதற்க்காக தான் இம்ரான் கான் அமேரிக்கா சென்றிருக்கிறார்.