பாகிஸ்தான் F-16 ரக போர் விமானத்தை இந்தியா சுடவில்லை; அதிர்ச்சி தகவல்!

  0
  6
  கோப்புப்படம்

  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது

  புதுதில்லி: இந்திய விமானப்படையால் பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க வாய்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

  pulwama attack

  இதனைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.

  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது.

  iaf jet

  இதனிடையே,  இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அதில் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அதிலிருந்த விமானிகள் இருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்தது. பின்னர், தனது நிலைப்பாட்டை மாற்றிய பாகிஸ்தான், ஒரு விமானி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார் என்றது.

  abinanthan

  இதையடுத்து, ராணுவ நடவடிக்கைகள், விமானப்படை தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. பாதுகாப்பு படையின் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

  இந்த சண்டையில், பாகிஸ்தானின் ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேசமயம், துரதிருஷ்டவசமாக இந்திய விமானப்படையில் மிக் 21 பைசன் ரக விமானத்தை விமானியுடன் காணவில்லை என்றார்.

  பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதும், மற்றொரு விமானத்தை துரத்தி சென்ற போது, எதிர்பாரா விதமாக இந்திய விமானப்படை விமானம் விபதுக்குள்ளானதாகவும், அதை இயக்கி சென்ற விமானி அபிநந்தனை அந்நாட்டு ராணுவத்தினர் சிறைப்பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், பாகிஸ்தானில் சிறைபட்ட விமானி அபிநந்தனை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது.

  iaf officials

  மேலும், பிப்ரவரி மாதம் 28-ம் தேதியன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம், இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்திய AMRAAM எனப்படும் வான் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏவுகணையின் சில துண்டுகளை காட்டியது. தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆயுதங்களை பாகிஸ்தான் வாங்கியதாகவும் அப்போது அதிகாரிகள் கூறினர்.

  அதேசமயம், இந்திய விமானப் படையால், பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என தொடர்ந்து கூறி வந்த இந்திய அரசும், விமானப்படையும், அது தொடர்பான எந்த ஆதாரத்தையும் தெரிவிக்கவில்லை.

  இந்நிலையில், இந்திய விமானப்படையால் பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க வாய்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியுறவுக் கொள்கைகள் (Foreign Policy) எனும் அமெரிக்க செய்தி நிறுவனம், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

  அதில், பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானங்களின் எண்ணிக்கையை கணக்கிட அமெரிக்காவை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாகவும், அதன் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் கணக்கிட்டதில் பாகிஸ்தான் வசம் ஏற்கனவே இருந்த அதே F-16 ரக போர் விமானங்கள் தற்போதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் என நடந்தது என்பதில், இந்திய அதிகாரிகள் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தியிருக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  imran khan

  பாகிஸ்தானில் ஆய்வு செய்து அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை குறித்த இந்த தகவல், இந்திய அரசு கூறி வந்த கூற்றுக்களை கேள்விக் குறியாக்கியுள்ளதுடன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  nirmala sitharaman

  முன்னதாக, இந்தியா டுடே-வுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மை தான் என உறுதிபட தெரிவித்தார். அத்துடன் முதலில் இரண்டு விமானிகள் தங்கள் வசம் இருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். விதிகளின் படி, நம்முடைய விமானி ஒருவர் தாயகம் திரும்பி விட்டார். மற்றொரு விமானி யார் எனவும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதையும் வாசிங்க

  தமிழகத்தில் மட்டுமல்ல ஆந்திராவிலும் இதே கதி தான்; சந்திரபாபு நாயுடு தர்ணா!