பாகிஸ்தான் தோற்றதற்கு சானியா மிர்சா காரணமா? ட்ரெண்டாகும் ட்விட்டர் சண்டை

  0
  4
  ​​சானியா மிர்சா

  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடன் பாகிஸ்தான் வாங்கிய அடிக்கு அடுத்த உலகக் கோப்பை நடக்கும் வரைக்கும், பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள் போல. இந்த உலகக் கோப்பையில், பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியிலேயே அந்த அணியின் கேப்டன் உட்பட நிறைய வீரர்கள் பீல்டிங்கின் போது ஓட முடியாமல் தொப்பையுடன் பிட்னெஸில் பல்லைக் காட்டியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

  உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடன் பாகிஸ்தான் வாங்கிய அடிக்கு அடுத்த உலகக் கோப்பை நடக்கும் வரைக்கும், பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள் போல. இந்த உலகக் கோப்பையில், பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியிலேயே அந்த அணியின் கேப்டன் உட்பட நிறைய வீரர்கள் பீல்டிங்கின் போது ஓட முடியாமல் தொப்பையுடன் பிட்னெஸில் பல்லைக் காட்டியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

  sania mirza

  இந்நிலையில், இந்தியாவுடனான போட்டியில் ஆரம்பம் முதலே அந்த அணி, பரிதாபமாக தோல்வியின் விளிம்பில் இருந்து, மரண அடி வாங்கி தோற்றதை பாகிஸ்தான் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியாவுடனான போட்டி நாளில், மைதானத்திலேயே பாகிஸ்தான் கேப்டன் கொட்டாவி விட்ட வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கழுவி ஊற்றி வருகிறார்கள் ரசிகர்கள்.

  ind vs pak

  இந்நிலையில்,  பாகிஸ்தான் வீரர்கள் போட்டிக்கு முந்தின நாள் இரவு துரித உணவுகளை உண்டதாகவும், பார்ட்டியில் இருந்ததாகவும் வீடியோக்கள் பறந்தது. இது குறித்து பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கின் மனைவியும் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் மாடலும் நடிகையுமான வீணா மாலிக் என்பவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. முன்னதாக வெளியான வீடியோவில் சோயப் மாலிக்குடன் சானியாவும் இருப்பார். இந்நிலையில் சானியா மிர்சாவை டேக் செய்த வீணா மாலிக், ‘சானியா, உங்களின் குழந்தையை நினைத்து நான் கவலை கொள்கிறேன். உங்களைக் குழந்தையை எடுத்துச் செல்ல கூடிய இடமா அது? எனக்குத் தெரிந்தவரை துரித உணவுகள் விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது கிடையாது. ஓர் அம்மாவாகவும் வீராங்கனையாகவும் உங்களுக்கு தெரியுமே? என்று சாடினார்.
  இதற்குப் பதிலளித்த சனியா மிர்சா, ‘வீணா, முதலில் நான் எனது குழந்தையை அங்கு அழைத்துச் செல்லவில்லை. மேலும் இது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம். மற்றவர்களை விட எனது குழந்தைமீது நான் அதிக கவனம் கொண்டுள்ளேன். இரண்டாவது, நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டயட்டீஷியன் கிடையாது. மேலும் பாகிஸ்தான் வீரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்போது தூங்குகிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க நான் அவர்களின் அம்மாவும் கிடையாது. அவர்களின் ஆசிரியரும் கிடையாது.

  sania mirza

  மூன்றாவது, மிக முக்கியமானது. நான் உங்கள் இடத்தில் இருந்தால் உங்களின் குழந்தைகளை நினைத்துத்தான் கவலை கொள்வேன். நாகரீகம் இல்லாமல் அட்டைப் படத்துக்காக நீங்கள் கொடுத்த புகைப்பட போஸ்களை உங்களின் குழந்தைகள் பார்த்தால் என்ன ஆகும். இது எவ்வளவு மோசமானது? ஆனாலும் நீங்கள் எங்கள் குழந்தை குறித்து கவலை கொண்டதுக்கு நன்றி’ என்று பதிவிட்டார். அத்தோடு இந்த பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தால், அதுதான் இல்லை. இதனிடையே சானியா சில ட்வீட்களை நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
  அது குறித்து வீணா மாலிக், `கொஞ்சம் தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் ட்வீட்களை டெலீட் செய்யாதீர்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. நீங்கள் செய்ததை இல்லை என மறுக்க முடியாது. எனது போட்டோ குறித்து நீங்கள் குறிப்பிட்டது எடிட் செய்யப்பட்ட புகைப்படம். என்னைக் குறித்து நீங்கள் சொன்ன கருத்துகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியும். எனினும் அது தொடங்கப்பட்ட விவாதத்தை திசை திருப்பி விடும்.

  tweet

  உங்கள் குழந்தையை அங்கு அழைத்துச் செல்லவில்லை என்பதில் மகிழ்ச்சி. மேலும் உங்களை நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீசியன் என்று சொல்லவில்லை. நான் உங்களை விளையாட்டு வீராங்கனை என்றுதான் சொன்னேன். அதனால் உங்களுக்கு ஃபிட்னஸ் குறித்துத் தெரிந்திருக்கும். மேலும் நீங்கள் ஒரு கிரிக்கெட்டரின் மனைவி. அவரின் உடல் நலம் மீது அக்கறை இருக்க வேண்டும்.
  முதலில் நீங்கள் ட்வீட் செய்தீர்கள். பின்பு நீக்கி விட்டீர்கள். தொடர்ந்து என்னை பிளாக் செய்தும் விட்டீர்கள். நான் மென்மையான விதத்தில்தான் கருத்துகளை தெரிவித்தேன். இது ஆரோக்கியமான விவதமாக இருந்திருக்கலாம்’ என்றார்.