பாகிஸ்தான் கேப்டனுக்கு மூளையே இல்ல!  முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!!

  0
  5
  சோயிப்

  இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் மட்டுமின்றி முன்னணி வீரர்கள் பலரும் கடுமையாக சாடி வரும் நிலையில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் சர்பிராஸ்கானை மூளையில்லாத கேப்டன் என்று திட்டியுள்ளார்.

  மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி இந்த முறையும் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டி முடிவு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் கூறுகையில், இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்றது முக்கியமான விஷயம். அதை வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்தது, மூளையில்லாததை காட்டுகிறது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 260-280 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம். 

  சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா செய்த அனைத்து தவறுகளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் செய்துள்ளது. பந்துவீச்சும் சரியில்லை. ஹசன் அலி சரியாக வீசவில்லை. திறமையை காண்பிக்க வழியில்லை. முகமது ஆமீர் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுக்கத்தவறிவிட்டார். மூத்த வீரர்கள் இந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று கூறினார்.