பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெரிய ஆப்பு.. புதிய பயிற்சியாளர் வச்ச செக்!!

  0
  5
  மிஸ்பா உல் ஹக்

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை சிறந்த உடல் தகுதி உள்ளவர்களாக மாற்ற புதிய உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்.

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை சிறந்த உடல் தகுதி உள்ளவர்களாக மாற்ற புதிய உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்.

  misbah

  கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி பில்டிங்கில் மோசமாக இருக்கிறது என தொடர்ந்து விமர்சனங்கள் அந்த அணி மீது வைக்கப்பட்டு வந்தன. அதற்கு ஏற்றார்போலவே உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் பில்டிங்கில் மிக சொதப்பலாக இருந்தது. அதேநேரம் கேட்ச் கோட்டை விடுவதிலும் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருந்தது. எளிதாக படிக்க வேண்டிய பவுண்டரிகளை கூட கோட்டை விட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு சமூகவலைதளங்களில் மிகவும் கிண்டலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் ஆளானார்கள். 

  இதற்கு முன்னர்  பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா-உல்-ஹக்  தேர்வு குழு தலைவராகவும் பயிற்சியாளராகவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

  இந்நிலையில் வீரர்களுக்கு நேற்று பயிற்சியை தொடங்கிய அவர், நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டிய வீரர்கள் தொப்பையும் தொந்தியுமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். 

  pakistan cricket team

  இதனால் பாகிஸ்தான் வீரர்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள சில அதிரடி முடிவுகளை மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக வீரர்கள் இனி பீட்சா, பர்கர் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றை முற்றிலுமாக தொடவே கூடாது. அதேபோல் பாரம்பரிய உணவான பிரியாணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இனி எடுத்துக் கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

  மிகச்சிறந்த வீரனுக்கு உடல் தகுதியும் மனவலிமையும் பிரதானமான ஒன்று. அவற்றை சரி செய்துவிட்டால் மற்றவை தானாக வந்து சேரும் என்பதை ஆணித்தனமாக நம்புவதாக கூறினார்.

  மிஸ்பா-உல்-ஹக் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வருகிற 27ம் தேதி முதல் ஆட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.