பாகிஸ்தானில் 3000ம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு… அலெக்சாண்டர் வந்து சென்றதாக ஆய்வாளர்கள் கருத்து!

  0
  3
  பாகிஸ்தான்

  பாகிஸ்தானில் 3000ம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவீரன் அலெக்சாண்டர் கைப்பற்றிய நகரமாக இது இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் இணைந்து அகழாய்வு பணி மேற்கொண்டுள்ளனர். இதில், பழைய நகரம் ஒன்று பூமிக்கடியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

  பாகிஸ்தானில் 3000ம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவீரன் அலெக்சாண்டர் கைப்பற்றிய நகரமாக இது இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  pakistan

  பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் இணைந்து அகழாய்வு பணி மேற்கொண்டுள்ளனர். இதில், பழைய நகரம் ஒன்று பூமிக்கடியில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

  pakistan

  அங்கு கிடைத்த கலைப் பொருட்களை ஆய்வு செய்தபோது, அது 3000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த பகுதியில் பழமையான ஆயுதங்கள், பானைகள், நாணயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. இந்த நகரத்துக்கு பாஜீரா என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  கி.மு 326ம் ஆண்டில் ஒடிகிராம் என்ற போரில் வென்ற பிறகு இந்த நகரை அலெக்சாண்டர் நிர்மாணித்து இருக்கலாம் என்றும், அதைத் தொடர்ந்து இந்தோ – கிரேக்க மக்கள், புத்தர்கள், இந்துக்கள் தற்போது இஸ்லாமியர்கள் வசம் இந்த பகுதி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்து கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது இந்த அகழ்வு மீது பலரின் பார்வையும் பதிந்துள்ளது.