பாகிஸ்தானில் வீடு வாங்கலாம்; ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் பேச்சு

  11
  இந்திரேஷ் குமார்

  2025-ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருக்கும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

  2025-ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவோடு இணைந்திருக்கும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

  மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திரேஷ் குமார், காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசியல் சாதூர்யத்துடன் ராணுவம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அங்கு அரசியல் நிலவரம் மாறியிருக்கிறது. 1947 -க்கு முன்னதாக பாகிஸ்தான் என்பதே  கிடையாது. 1945-இல் அது இந்துஸ்தானின் அங்கமாகவே இருந்தது. 2025-இல் மீண்டும் இந்துஸ்தானின் அங்கமாக மாறும். ஐரோப்பிய யூனியனைப் போல அகண்ட பாரதம் அமையும் என பேசினார்.

  மேலும் அவர், இன்னும் 7 ஆண்டுகளில் நீங்கள் பாகிஸ்தான் பகுதிகளில் வீடு வாங்கலாம், தொழில் தொடங்கலாம் என்றார்.