பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சாலைகளில் ஏற்பட்ட வெடிப்பால் மக்கள் பீதி!! 

  0
  13
  Earth Quake

  பாகிஸ்தானில்  5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர். 

  Earthquake

  இந்துகுஷ் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா, பெஷாவர், மர்டன், மலகண்ட் ஆகிய பகுதிகள் வரை உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், சாலைகளில்  கடுமையான விரிசல்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.