பாகிஸ்தானில் கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்! 4 பேர் கைது

  0
  3
  மதுபானம்

  பாகிஸ்தானில் கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்ற சீக்கிய பெண் கடந்த 3 தினங்களாக காணவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

  சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. அங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து கடந்த மாதம் கர்தாபூர் வழித்தடம் இரு நாடுகளிலும் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து ஏரளாமான சீக்கியர்கள் கர்தார்பூர் குருத்வாராவுக்கு புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

  கர்தார்பூர் குருத்வாரா

  கர்தார்பூர் வழித்தடம் திறப்பு வாயிலாக பாகிஸ்தான் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்வது போல் காட்டி கொண்டாலும், அங்கு நடப்பது வேறுவிதமாக உள்ளது. பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத பெண்களை கடத்தி சென்ற மதம் மாற்றுவது அதிகமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் கர்தார்பூர் குருத்வாராவுக்கு சென்ற சீக்கிய பெண் இதுவரை வீடு திரும்பவில்லை. 

  பாகிஸ்தான் போலீசார்

  இதனையடுத்து காணாமல் போன சீக்கிய பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பதிவு செய்த  அந்நாட்டு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் லாகூர் மற்றும் பைசாலாபாத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், அந்த சீக்கிய பெண் என்ன ஆனார் என்ற தகவல் இன்னும் வெளியே வரவில்லை.