‘பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்’ என்று கூறி முஸ்லீம் குடும்பத்தைத் தாக்கிய மர்ம கும்பல்

  0
  3
  muslim family assaulted

  ஹரியானா மாநிலம் குர்கிராமிலுள்ள தமஸ்பூர் கிராமத்தில், அடையாளம் தெரியாத கும்பலொன்று முஸ்லீம் குடும்பத்தினரை கண் மண் தெரியாமல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

  குர்கிராம் :

  ஹரியானா மாநிலம் குர்கிராமிலுள்ள தமஸ்பூர் கிராமத்தில், அடையாளம் தெரியாத கும்பலொன்று முஸ்லீம் குடும்பத்தினரை கண் மண் தெரியாமல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. தாக்கும் போது அவர்கள் ‘பாகிஸ்தானிற்கு செல்லுங்கள்’ என்று கோஷம் எழுப்பியதோடு அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் சிலவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

  muslim famil assaulted

  இது பற்றி அந்த இஸ்லாம் குடும்பம் அளித்துள்ள புகார் மனுவில் இருந்து, உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்து குர்கிராமில் வாழ்ந்து வருகிறது முகமது சஜீத் என்பவரின் குடும்பம். அவரது குழந்தைகளும், அவர்களின் உறவுக்காரக் குழந்தைகளும்  வீட்டின் அருகேயிருந்த காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தான், அங்கே வந்த சிலர், ‘இங்கு எதற்கு விளையாடுகிறீர்கள்? பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுங்கள்.’ என்று கூறிவாக்குவாதத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

  பின்னர், திடீரென்று அவர்கள் 20 முதல் 25 பேர் அடங்கிய கும்பலாகத் திரண்டு, ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த சில விலையுயர்ந்த பொருட்கள், நகைகள் மற்றும் பணம் முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

  muslim family aassaulted

  இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அந்த கும்பல் மீது கொலை முயற்சி வழக்கு தொடுத்துள்ளார். அந்தக் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

  மேலும், அந்த கும்பல் முஸ்லீம் குடும்பத்தினரைத் தாக்கும் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.