பாகிஸ்தானால் இந்தியாவை நெருங்க கூட முடியாது ; சேவாக் உறுதி !! 

  0
  1
  ஷேவாக்

  உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மான்செஸ்டரில் நாளை நடப்பதை யொட்டி இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், பாகிஸ்தான் முன்னாள் அதிவேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஆகியோர் யு-டியூப்பில் வீடியோ மூலம் விவாதத்தில் பங்கேற்றனர்.

  ind vs pak

  அப்போது ஷேவாக், ‘டாஸ் உள்ளிட்ட விஷயங்கள் எது எப்படி அமைந்தாலும் 16-ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த இயலாது’ என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த அக்தர், ‘பாகிஸ்தான் டாசில் வெற்றி பெற்றால் போட்டியையும் வெல்லும் என்று நினைக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார். அதே போல் இந்த உலக கோப்பையை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட அணியாலும் வெல்ல முடியும்’ என்று குறிப்பிட்டார். இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக்கின் கருத்து உண்மையாகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

  sehwag

  இந்த போடியானது 16-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.