பழைய பிரியாணி சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி: அதிர்ச்சி சம்பவம்!

  0
  2
  briyani

  பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  வேலூர்: பழைய பிரியாணியை சாப்பிட்ட 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  briyani

  வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர்  சீனிவாசன். இவருக்கு கனகா என்ற மனைவியும், கோபிகா என்ற மகளும் உள்ளனர்.  சீனிவாசனும், கனகாவும் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். அப்போது விருந்தில் பிரியாணி மீதம் இருந்ததால் கனகா அதை வீட்டிற்கு கொண்டு வந்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார். 

  briyani

  இந்நிலையில் மறுநாள் காலை குளிர்சாதனப்பெட்டியிலிருந்த பிரியாணியை மீண்டும் சுட வைத்து, வீட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். இதைச் சாப்பிடச்   சீனிவாசனின்  மகள் கோபிகா உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

  vellore

  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தைகளை உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் கோபிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
  இச்சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  இதையும் வாசிக்க : சுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3