பழைய நிகழ்வுகள் பற்றிப் பேசுவதால் ரஜினிக்கு என்ன பி.ஹெச்.டி பட்டமா கொடுக்க போறாங்க.. அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

  0
  2
  அமைச்சர் ஜெயக்குமார்

  அவர் பெரியார் பற்றி இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

  சில நாட்களுக்கு முன்னர்  துக்ளக் இதழின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதையின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார். அவர் பெரியார் பற்றி இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

  ttnm

  அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நான் தவறான விஷயம் ஏதும் சொல்லவில்லை.1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்துத் தான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த்  கூறுகையில் ,துக்ளக் விழாவில் நான் கற்பனையாக எதுவும் பேசவில்லை.தன்னுடைய பேச்சுக்கு,மன்னிப்போ,வருத்தமோ தெரிவிக்க முடியாது திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். 

  ttn

  இந்நிலையில் இது குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பழைய நிகழ்வுகளைப் பற்றி ரஜினிகாந்த் ஆராய்ச்சி செய்து பேசுவதால் அவருக்கு என்ன பி.ஹெச்.டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம் என்று அதனை ஞாபகப்படுத்தும் விதமாக ரஜினி பேசியுள்ளார். அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் இவ்வாறு கூறியது