பழிவாங்குற வயசா சார் இதெல்லாம்?

  28
  Oorkavalan

  இத்தனை பேரு வெட்டிட்டு செத்துருக்கானுக, உங்களுக்கென்ன ப்ரோ காமெடின்னு கோவப்படாதீங்க ப்ளீஸ். மேற்சொன்ன எல்லா படுகொலைகளிலும் சம்பந்தப்பட்டவர்களின் சராசரி வயது 25. பழிவாங்குற வயசா சார் இது?

  சிவகங்கைப்பக்கம் திருப்புவனம் அருகே மிக்கேல்ப்பட்டணம் என்றொரு சிற்றூர். அவ்வூரில் இருக்கும் இரு அண்ணன் தம்பிகளைப்பற்றிய நிஜக்கதை இது. தம்பி பெயர் பிரசாந்த். கடந்த வருடம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறை சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கும் ஜாமீன் பறவை. ஜெயில் சகவாசம் கையையும் வாயையும் துறுதுறுவென வைத்திருந்திருக்கும் போல பிரசாந்த்தை. ஒரு மாதம் முன்பாக நண்பர்களுடம் அமர்ந்து குடித்துக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் துறுதுறு குணம் குறுகுறுவென எட்டிப்பார்க்கவே, ஏடாகூடமாக எதையோ சொல்லப்போய், வெட்டுப்பட்டு ஸ்பாட் மர்கயா. பிரசாந்த்தை சம்பவம் செய்த சிவன்மூர்த்தி சிறை சென்று தற்போது ஜாமீன் பறவையாகி இருக்கிறார்.

  Cold blood murder

  நன்றாக கவனியுங்கள். முதலில் பிரசாந்த் யாரோ மூவரைக்கொல்ல, அடுத்து பிரசாந்த்தை சிவன் மூர்த்தி செய்ய, கடைசியாக சிவன் மூர்த்தியை பிரசாந்த்தின் அண்ணன் ஊர்க்காவலன் கொன்று, நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியிருக்கிறார். சிவன் மூர்த்தியை கொன்று அவரின் ரத்தத்தை தம்பி பிரசாந்த்தின் சமாதியில் தெளித்ததாக ஆடியோவெல்லாம் ரிலீஸ் பண்ணியிருக்கிறார் ஊருக்காவலன். பேரைப் பாத்தீங்களா? காலக்கொடுமை. இத்தனை பேரு வெட்டிட்டு செத்துருக்கானுக, உங்களுக்கென்ன ப்ரோ காமெடின்னு கோவப்படாதீங்க ப்ளீஸ். மேற்சொன்ன எல்லா படுகொலைகளிலும் சம்பந்தப்பட்டவர்களின் சராசரி வயது 25. பழிவாங்குற வயசா சார் இது? கொல்லப்பட்ட சிவன்மூர்த்திக்கு யாரும் அண்ணன் தம்பி இருக்கிறார்களா என தெரியவில்லை!