பழிதீர்த்தது ஆஸ்திரேலியா, 11ஆண்டுகளுக்குப் பிறகு டி20 தொடரை வென்று சாதித்தது!

  0
  8
  aus ttn

  சொந்த மண்ணில் கோலி அன்கோவால் பந்தாடப்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து வருகிறது.

  பெங்களூரு: சொந்த மண்ணில் கோலி அன்கோவால் பந்தாடப்பட்ட ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்று பயணம் செய்து வருகிறது.

  முதல் டி.20 தொடரை ஏற்கனவே வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி நேற்று பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டது.டாஸ்வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச தீர்மானித்தார்.ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் ஏதும் இல்லை.மாறாக இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

  ind ttn

  ரோகித் ஷர்மாவுக்கு ,மயங்க் மார்கண்டே,உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷிகர் தவான்,விஜய் சங்கர்,சித்தார்த் கெளல் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
  முதலில் ஆடிய இந்தியஅணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன் குவித்தது.வீராட் கோலி ஆறு சிக்ஸர்கள் இரண்டு பெளண்டரிகளுடன் 38 பந்துகளில் 72 ரன் எடுத்து அசத்தினார்.

  ind ttn

  அதே போல கே.எஸ் ராகுல் 47,தோனி 40 எடுத்தனர்.கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 77 ரன்கள் எடுத்திருந்தது.இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை எதிர் கொண்டு பேட்டிங்கைத் தொடர்ந்தது ஆஸ்திரேலியா.ஓப்பனர் ஸ்டெயின்ஸை சித்தார்த் கெளலும்,கேப்டன் ஆரோன் பிஞ்ச்சை விஜய் சங்கரும் ஆட்டமிழக்கச் செய்தனர்.இதுவரை எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டு இருந்தது.மாக்ஸ்வெல் களம் இறங்கியவுடன் ஆட்டமே திசை மாறிவிட்டது.ஷார்ட்டுடன் ஜோடி சேர்ந்த அவர் சிக்சரும் பெளண்டரியுமாக பறக்கவிட்டார்.

  இரண்டு பந்துகள் மிச்சமிருந்த நிலையில் 19.4 ஓவரிலேயே ஆஸ்திரேலியா வெற்றிக்குத் தேவையான் 194 ரன்கள் எடுத்து வென்றதோடு தொடரையும் கைப்பற்றியது. இதில் மாக்ஸ்வெல் மட்டும் 55 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகளுடன் 113 ரன் விளாசி வெற்றியை எட்டினார்.2008ம் ஆண்டு மெல்பர்ன் நகரில் நடந்த ஒரே ஒரு ஆட்டம் கொண்ட தொடரில் தோற்றதற்குப் பிறகு இப்போதுதான் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் ஒரு டி20 தொடரை இழந்திருக்கிறது.