பள்ளி மாணவியிடம் ஆபாச பேச்சு! 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

  0
  22
  போக்சோ சட்டம்

  சென்னை, அனகாபுத்தூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் குன்றத்தூர் பகுதியில் இருந்து ஒரு மாணவி 11ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவிக்கு ஆபாச தொல்லைகள் கொடுத்ததாக பள்ளியில் பணிபுரியும் 12 ஆசிரியர்கள் மீதும், உடன் படித்து வரும் 10 மாணவர்கள் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. 

  சென்னை, அனகாபுத்தூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் குன்றத்தூர் பகுதியில் இருந்து ஒரு மாணவி 11ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவிக்கு ஆபாச தொல்லைகள் கொடுத்ததாக பள்ளியில் பணிபுரியும் 12 ஆசிரியர்கள் மீதும், உடன் படித்து வரும் 10 மாணவர்கள் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. 

  government school

  இது பற்றி கூறப்படுவதாவது, அந்த மாணவியின் தாயார், பள்ளி கல்வித் துறைக்கும், காவல் ஆணையருக்கும், அந்த பள்ளியில் நடக்கும் அவலங்கள் குறித்து புகார் மனு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த புகார் மனுவில், கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளியில் கலவரம் என்று தகவல் கேள்விப்பட்டு, பதறியடித்துக் கொண்டு எனது மகளைப் பார்ப்பதற்காக பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்போது, பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கிருபானந்தன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் விஷயமாக தகராறு ஏற்பட்டு, ஆசிரியர் கிருபானந்தன், உடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் 12 பேரையும் தனக்கு ஆதரவாக தூண்டிவிட்டு, தன் வகுப்பில் படித்து வரும் மாணவர்களையும் முரளிதரனுக்கு எதிராக தூண்டிவிட்டு பள்ளியில் இருக்கும் மேஜை, நாற்காலி, மின் விசிறி, மின் விளக்கு, போன்றவற்றை எல்லாம் உடைத்துப் போட்டு  கலவரத்தை ஏற்படுத்தியதை நான் பார்த்தேன். 
  மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டிய ஆசிரியரே, மாணவர்களை வன்முறையில் தூண்டச் சொன்னதைப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன். மேலும் மாணவர்களை, தலைமை ஆசிரியையுடன், இன்னொரு ஆசிரியரையும் இணைத்து கானா பாடல்களைப் பாடி டிக்டாக் செயலியில் வெளியிடுமாறும் சொல்லிக் கொண்டிருந்தார். இதனை தட்டிக் கேட்ட எனது மகளுக்கு மடிக்கணினி வழங்காமல் புறக்கணித்து வந்தனர். பின் இது குறித்து, கல்வித்துறைக்கு புகார் அளித்த பிறகு மடிக்கணினி வழங்கினார்கள். இந்நிலையில் எனது மகளை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்பை என்று கிண்டல் செய்தும், அவளிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசியும், மகள் மீது ஆசிட் வீசுவதாகவும் மிரட்டியதால் எனது மகள் இம்மாதம் 5 ந் தேதி முதல் பள்ளிக்கு செல்ல மறுப்பதாகவும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். 

  poasco act

  இந்த புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக தாம்பரம் போலீசாருக்கு, காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, அந்த பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணிபுரியும் கிருபானந்தன் உட்பட 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்டம், பொது சொத்தை சேதப்படுத்துதல், ஆபாசமாக பேசுவது, மிரட்டல், சைகையின் மூலம் ஆபாசமாக நடப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.