பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்தா?

  0
  2
  பள்ளி

  இந்த வகுப்புகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

  மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது

  தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில்  வரும் 23-ம் தேதி முதல் விடுமுறை தொடங்க உள்ளது. 

  dpi

  இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குக் காந்திய சிந்தனை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும்,  இந்த வகுப்பானது அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த வகுப்புகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக  தகவல் வெளியானது.

  school

  இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளி கல்வித்துறை, ‘மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை.  காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம். அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம். அதனால் காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல்’ என்று கூறியுள்ளது.