பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் பள்ளி மாணவி! 

  0
  7
  Viral Photo

  தெலங்கானா மாநிலத்திலுள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் நிகழ்ச்சிக்குவந்த  டி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு மாணவி ஒருவர் சாப்பாடு ஊட்டுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 

  MLA

  ஜன்கோன் மாவட்டம் கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாடிகொண்டா ராஜையா. இவர் சில்பூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சிகள் முடிந்து அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது உணவு உண்ணும் அறைக்குவந்த எம்.எல்.ஏ கையால் உணவை எடுத்து சாப்பிடாது, அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சாப்பாடு ஊட்டிவிட கூறியுள்ளார். எம்.எல்.ஏ.வுக்கு மாணவி சாப்பாடு ஊட்ட அதனை பக்கத்திலிருந்த ஒரு கட்சி நிர்வாகிகள் ரசித்துக்கொண்டிருந்தனர்.

   

   

  இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூகவலைதளத்தில் வைரலானதையடுத்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற அந்த மாணவி தனக்கு சாப்பாடு ஊட்ட விருப்பம் தெரிவித்ததாகவும் அவரை எனது மகளாக நினைத்து ஊட்டியதை ஏற்றுக்கொண்டதாகவும் எம்.எல்.ஏ  ராஜையா விளக்கமளித்துள்ளார்.