பள்ளி கழிவறையில் தகாத உறவில் இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு!

  0
  2
  ஆசிரியர்

  கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவர் பள்ளியின் கழிப்பறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

  நாமக்கல் : பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  teacher

  நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் கடந்த 4 வருடங்களாகச் சரவணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் அங்கன்வாடி மைய பொறுப்பாளராக  உள்ள ஜெயந்திக்கும் தகாத உறவு இருப்பதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவர் பள்ளியின் கழிப்பறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதைக் கண்ட மாணவர்கள் சிலர் தங்கள் பெற்றோரிடம் கூற அவர்கள் இந்த விவகாரத்தைத் தலைமை ஆசிரியர் வரை கொண்டு சென்றுள்ளனர்.  தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

  arrested

  இந்நிலையில் ஆசிரியர் சரவணனும், ஜெயந்தியும் மீண்டும் பள்ளியில் தகாத முறையிலிருந்துள்ளனர். இந்த விவகாரம் மீண்டும் அப்பகுதி மக்களுக்குத் தெரியவர அவர்கள் பள்ளிக்குள் புகுந்து  ஆசிரியர் சரவணனுக்கு தர்ம அடி கொடுத்தனர். 

  இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், பட்டியலின வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆசிரியரைத் தாக்கிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் காரணமாக ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.