பள்ளி, கல்லூரிகள் மே 15 வரை மூடியே இருக்க வேண்டும்! – மத்திய அரசு பரிந்துரை

  0
  2
  Search Results Web results School, Colleges Will Be Closed Till May 15

  பள்ளி கல்லூரிகளை மே 15ம் தேதி வரை திறக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

  கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிந்த பிறகு தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தீவிரமடைந்து வருவதால் பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றன.

  இந்த நிலையில் கொரோனா தொடர்பான முடிவுகளை எடுக்க அமைக்கப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைக் குழு நேற்று கூடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது. அதில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பேசப்பட்டது. ஆனால், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள் செயல்பட தடைவிதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும், நாடு முழுக்க மே 15ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றும், அது வரை தேர்வுகள் எதையும் நடத்த வேண்டாம் என்றும் அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் விரைவில் உத்தரவு வெளியாகும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.