பள்ளி. கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது தெரியுமா? மத்திய அரசு விளக்கம்!

  0
  10
  பள்ளி, கல்லூரிகள்

  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,218 ஆகவும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆகவும் உயர்ந்துள்ளது.

  சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.

  பொதுமக்கள்

  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 553 கொரோனா நோயாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். மேலும் 27 பேர் இறந்தள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,218 ஆகவும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆகவும் உயர்ந்துள்ளது.

  சுகாதார பணியாளர்கள்
  இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. இந்நிலையில் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி முடிவடையும் நிலையில் பள்ளி கல்லூரி திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளன.

  ttt

  இதுகுறித்து  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறும் போது,  “இந்தியாவில், 34 கோடி மாணவர்கள் உள்ளனர். இது, அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகை. மாணவர்கள் தான் எங்கள் சொத்து. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம். 14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. வரும் 14 ஆம்  தேதி கொரோனா நிலவரத்தை பார்த்த பிறகு தான் முடிவெடுக்க முடியும். இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
  ஊரடங்கு விலக்கப்பட்டவுடன், நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது போன்ற பணிகள் நடைபெறும்”  என்றார்.