பல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் !

  0
  1
  netherland

  நெதர்லாந்தில் வெளி உலக தொடர்பே இல்லாமல் ஒரு பாதாள அறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் உள்பட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

  நெதர்லாந்து மாகாணத்தில் 9 வருடங்களுக்கு முன்னர் ஒரு மதுபான விடுதியில் அதிக அளவு மது குடித்து விட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் எழுந்து பார்த்தபோது ஒரு பாதாள அறையில் தான் அடைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தார். அங்கிருந்து தப்ப முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது. மேலும் அவருடன் 6 சிறுவர்களையும் அடைத்து வைத்திருந்தார் ஒரு பெரியவர்.

  nether

  அங்கு அனைவருக்கும் வெறும் காய்கறிகளும், சில இறைச்சி மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஒரு வழியாக அந்த இளைஞர்மட்டும் தப்பித்து வந்து 9 வருடங்களுக்கு முன்ன மதுபானம் அருந்திய விடுதிக்குள் சென்று, என்னை யாராவது காப்பாற்றுங்கள் நான் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன் என புலம்பினார். தாடியும், மீசையுமாக திடீரென வந்து புலம்பிய நபரை பார்த்த பார் ஊழியர்கள் அவரை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர் சொந்த இடத்துக்கு சென்றனர். பின்னர் பாதாள அறையில் இருந்த 6 சிறுவர்களை மீட்டு அவர்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்த முதியவரை கைது செய்தனர். பல வருடங்களாக சிறுவர்களை ஏன் அடைத்து வைத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.