பல ஆண்களுடன் படுக்கையை பகிர கணவரே வற்புறுத்தினார்: அதிரவைக்கும் சின்னதிரை நடிகை!?

  0
  80
  பாலியல் தொல்லை

  சினிமாவில் பணம் சம்பாதிக்கும்  ஆசையில் கணவரே தன்னை  தவறான பாதைக்குப் போக சொன்னார் என்று சின்னதிரை நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

  சென்னை:  சினிமாவில் பணம் சம்பாதிக்கும்  ஆசையில் கணவரே தன்னை  தவறான பாதைக்குப் போக சொன்னார் என்று சின்னதிரை நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

  ragini

  திரைத்துறையில் நடிக்க பெண்களைப் படுக்கைக்கு அழைக்கும்  வழக்கம் இருப்பதாக அந்த துறையைச் சார்ந்த பலரும் புகார் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான  ‘மை நேம் இஸ் மங்கம்மா’ தொடரில் நடித்தவர்   நடிகை ராகினி. இவருடன் நடிகை ஸ்ரீதேவியின் தங்கை மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர் திரைத்துறையில் பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.  

  ragini

  இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், ‘எனக்கு சின்ன வயதிலேயே திருமணம் நடந்ததால் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டேன்.  எனது கணவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் என்னை திரைத்துறை சார்ந்த பல ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அது என்  வாழ்க்கையின் இருண்டகாலம். ஒருகட்டத்தில் அவரது தொல்லை தாங்க முடியாமல் ஒரு வருடத்திலேயே அவரை விட்டுப் பிரிந்து விட்டேன்’ என்றார்.

  ragini

  தொடர்ந்து பேசிய அவர், சாமானிய மனிதருக்கு நடிகர்களை பார்த்தால் தவறான கருத்துக்களே தோன்றும். குறிப்பாக நடிகைகள் மீது அவர்களுக்கான அபிப்ராயம் தவறானதாக இருக்கும். ஆனால்  எல்லாத்துறைகளிலும் இது போன்ற பிரச்சனை  இருக்கும். சில சுயநலவாதிகளால் தான் இது போன்ற சம்பவங்கள்  அரங்கேறுகிறது. அதற்காக ஒட்டுமொத்த துறையும்  மோசமானது கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.